பல்சுவை இணைய இதழ்
    


புதிய வெளியீடு
செய்திகள் - 2018
குட்கா ஊழல் நடந்த பொழுது நான் கமிஷனர் கிடையாது - ஜார்ஜ்
சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ், குட்கா ஊழல் புகாரில் சிக்கியுள்ளார். கடந்த 5-ந் தேதி, சி.பி.ஐ. அதிகாரிகள் அவருடைய வீட்டில் 25 மணி நேரம் அதிரடி சோதனை மேற்கொண்டு, முக்கிய ஆவணங்களை அள்ளிச்சென்றனர்.

இந்நிலையில் சி.பி.ஐ. சோதனை குறித்து எஸ்.ஜார்ஜ் கூறியதாவது-

குட்கா ஊழல் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருவதால் நான் எதுவும் தெரிவிக்க இயலாது.

அதேசமயத்தில் 33 ஆண்டுகாலமாக பணியில் இருந்தேன். நான் இதுவரை எந்த தவறும் செய்ததில்லை.

தி.மு.க. எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கில், குட்கா உற்பத்தியாளர் 3 நாட்கள் லஞ்சம் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். அந்த நாட்களில் நான் போலீஸ் கமிஷனராக இல்லை. அந்த காலகட்டத்தில் கால்பந்து போட்டிக்காக மாற்றப்பட்டேன்.

பின்னர் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ந் தேதி தான், நான் மீண்டும் கமிஷனராக பொறுப்பேற்றேன்.

என்று குறிப்பிட்டுள்ளார்.