பல்சுவை இணைய இதழ்
    


புதிய வெளியீடு
செய்திகள் - 2018
பேரணியின் நோக்கம் அஞ்சலி செலுத்துவதே - அழகிரி
மறைந்த தி.மு.க., தலைவர் கலைஞருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, அவரது மகன் அழகிரி தனது ஆதரவாளர்களுடன் கருணாநிதியின் நினைவிடம் நோக்கி பேரணியாகச் சென்றார்.

இந்த பேரணி, திருவல்லிக்கேணி போலீஸ் ஸ்டேசன் அருகே துவங்கியது. அழகிரி உட்பட அவரது பெரும்பாலான ஆதரவாளர்கள் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.

பேரணியின் காரணமாக, வாகனங்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன. பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டனர்.

பேரணியாக திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தை அடைந்ததும், அழகிரி கலைஞருக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் அவரது மகன் , மகள் ஆதரவாளர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் நிருபர்களிடம் அழகிரி கூறுகையில், இன்று என் தந்தை மறைந்து, 30வது நாள்.. அதை முன்னிட்டு நடந்த இந்த அமைதி பேரணியில் கலந்து கொண்ட தி.மு.க.வின் உண்மையான தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும், நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பேரணி அமைதியாக நடைபெற ஒத்துழைத்த காவல்துறையினருக்கும், ஆதரவு தந்த பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கூறினார்.