பல்சுவை இணைய இதழ்
    


புதிய வெளியீடு
செய்திகள் - 2018
சோபியா விவகாரத்தில் தமிழிசை கேள்வி
சோபியா விவகாரம் தொடர்பாக, தமிழிசை சவுந்திரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜகவிற்கு எதிராக, சோபியா முழக்கமிட்ட சம்பவத்தை தொடர்ந்து, விமானத்திற்குள் இது போல் கோஷமிடலாமா, 28 வயது பெண்ணுக்கு சட்ட திட்டங்கள் தெரியாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இச்சம்பவம் நடந்து, பல மணி நேரத்திற்கு பிறகு, சோபியாவின் தந்தை தம்மீது கொலை மிரட்டல் விடுத்தது சரியா? தாம் ஒரு பெண் தலைவர் என்பதாலேயே, சமூக வலைத்தளங்களும், நேரில் பார்த்தவர்களும், இதனை தவறாக சித்தரிக்கின்றன.

அதனை அரசியல் கட்சித்தலைவர்களும் ஆதரிக்கின்றனர் என்று தமிழகத்தின் பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.

மிகக்கடுமையான விமர்சனைகளை எதிர்கொண்டு வரும் தம்மிடம், பொறுமை வேண்டும் என அவர்கள் ஆலோசனை சொல்வது வேடிக்கை என்றும் கூறியுள்ளார்.