பல்சுவை இணைய இதழ்
    


புதிய வெளியீடு
செய்திகள் - 2018
பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு பல்வேறு காரணங்கள் - மத்திய அமைச்சர்
பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த விலையுயர்வு குறித்து, மத்திய பெட்ரோலியதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்து கூறுகையில்,

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதினாலே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

இதனால் பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்பினை, ஜிஎஸ்டியில் கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டுவரும் போது தான், மக்கள் பயன் பெறுவார்கள். மேலும், கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதாக கூறிய துருக்கி, வெனிசுலா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் அதை நிறைவேற்றவில்லை.

விலை உயர்வினால் மக்கள் படும் துயரங்களை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது.” எனக் கூறினார்.

இதற்கிடையே இன்று, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 41 காசுகள் அதிகரித்து ரூ.83.54 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 47 காசுகள் அதிகரித்து ரூ.76.64 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.