பல்சுவை இணைய இதழ்
    


புதிய வெளியீடு
செய்திகள் - 2018
ஓரின சேர்க்கை குற்றமில்லை - சுப்ரீம் கோர்ட்
இந்திய தண்டனைச் சட்டத்தின் 377–வது பிரிவின் படி, ஓரினச் சேர்க்கை குற்றமாகும். இயற்கைக்கு மாறான இந்த சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு, குறைந்தது 10 ஆண்டுகள் வரையும், அதிக பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கவும் இச்சட்டத்தில் இடமுண்டு. மேலும் அபராதமும் விதிக்கப்படலாம். இச்சட்டத்தினை எதிர்த்து, பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இவ்வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவு பெற்ற நிலையில், தீர்ப்பை குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

இன்று இவ்வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-

தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் விருப்பு, வெறுப்புகள் என்று இருக்கும். தங்களின் தனித்துவத்திலிருந்து யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது. இவ்வழக்கில், எங்களின் தீர்ப்புகள் பல விதமாக இருக்கும். ஆனால், அதில் முரண்பாடுகள் இல்லை.

அடையாளத்தை தக்கவைத்தல் என்பதே வாழ்க்கையின் எல்லையாக இருக்கின்றது. அதுபோல், அரசியலில் காணப்படும் சாசன சமநிலையை யாரும், எண்ணிக்கைகளைக் கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை.

ஓரின சேர்க்கை என்பது குற்றமில்லை என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிலும் ஓரின சேர்க்கையை தடைசெய்யும் சட்டப்பிரிவு 377 ஐ ரத்து செய்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.