பல்சுவை இணைய இதழ்
    


புதிய வெளியீடு
செய்திகள் - 2018
தாமத மேல்முறையீடு - சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
உத்தரபிரதேச மாநில எச்.பி.டி.ஏ. (நகர்ப்புற திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஹபுர் பில்குவா மேம்பாட்டு ஆணையம்) என்ற அமைப்பு, வருமான வரிச்சட்டத்தில் விலக்கு கேட்டு மனு செய்தது. இந்த மனுவினை பரிசீலித்த காசியாபாத் வருமான வரித்துறை ஆணையர் கடந்த 2006-ம் ஆண்டு நிராகரித்து, தள்ளுபடி செய்தார்.

இதனை எதிர்த்த அந்த அமைப்பு, வருமான வரித்துறையின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மீண்டும் மேல் முறையீடு செய்தது. இதனை பரிசீலித்த தீர்ப்பாயம், மானிய பதிவுக்கு ஒப்புக்கொண்டது.

இதனை எதிர்த்து வருமான வரித்துறையின் சார்பில், தாக்கல் செய்த மனுவினை, அலகாபாத் உயர்நீதிமன்றம் சென்ற 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந்தேதி தள்ளுபடி செய்தது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, வருமான வரித்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, மேல்முறையீட்டுக்கு ஏன் 596 நாட்கள் தாமதமானது? என விளக்கம் கேட்டதற்கு, வருமானத்துறையினர் அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை.

எனவே, வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம், கடும் கண்டனம் தெரிவித்தது. ‘தயவுசெய்து இப்படி செய்யாதீர்கள். உச்சநீதிமன்றம் என்பது சுற்றுலா தலம் அல்ல. ’ என்று தெரிவித்தனர்.

மேலும், தாமதத்துக்கான காரணம் குறித்து நீதிமன்றத்துக்கு தவறான தகவல்களை அளித்ததற்காக ரூ.10 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர்.