பல்சுவை இணைய இதழ்
    


புதிய வெளியீடு
செய்திகள் - 2018
உச்சத்தைத் தொட்டது பெட்ரோல் விலை - லிட்டர் ரூ.82.24
இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, தாங்களே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை முடிவு செய்து கொள்ள மத்திய அரசு அனுமதித்திருந்தது.

சென்ற மே மாதத்திலிருந்து, பெட்ரோல், டீசலின் விலை அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நேற்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.81.92க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.74.77க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று ஒரு லிட்டர் பெட்ரோல், நேற்றைய விலையை விட 32 பைசாக்கள் உயர்ந்து ரூ. ரூ.82.24 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், ஒரு லிட்டர் டீசல் 42 பைசாக்கள் உயர்ந்து ரூ.75.19க்கும் விற்பனை செய்யப்படுகிறது.