பல்சுவை இணைய இதழ்
    


புதிய வெளியீடு
மருத்துவம்
சுண்டைக்காய் உண்பதால் சர்க்கரை நோய் குணமாகுமா?
நம் தமிழ்நாட்டில் மிகவும் பரவலாக காணப்பெறும் ஒரு தாவரம் சுண்டைக்காய்.

சுண்டைக்காயின் ஆங்கில பெயர் Turkey Berry. தாவரவியல் பெயர் Solanum torvum.

காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் தானாகவே வளர்வது மலை சுண்டை என்று அழைக்கப்படும்.. அதேபோல் விவசாய நிலங்களிலும், வீட்டின் பின்புறத்திலும், வளர்வது பால் சுண்டை என்று அழைக்கப்படும்.

சுண்டைக்காய் இயற்கையாகவே கசப்பு சுவை கொண்டதாக இருப்பதால் பெரும்பான்மையான மக்களால் விரும்பப்படாத ஒரு உணவு பொருளாகவே இருந்து வந்துள்ளது.

சுண்டைக்காய் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் அதிக மருத்துவ குணங்களை தன்னுள் அடக்கியுள்ளது. இலைகள், வேர், கனி என முழுத்தாவரமும் மருத்துவ குணத்தினை கொண்டுள்ளது.

100 கிராம் சுண்டைக்காயில் 22.5 மி.கி. இரும்பு சத்தும், 390 மி.கி. கால்சியமும், 180 மி.கி. பாஸ்பரசும் உள்ளது. அதுமட்டுமல்லாமல் வைட்டமின் பி மற்றும் சி சத்துக்களும் இந்த சுண்டைக்காயில் அதிகம் உள்ளது.

சுண்டைக்காயை வாரம் ஒரு முறையாவது நம் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.. அதோடு நம் வயிற்றில் உள்ள பூச்சிகளும் அழியும்.

இத்தனை சிறப்புகள் மிக்க இதன் இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கும். இதன் கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு ஓர் அற்புதமான மருந்தாகும்.

உடலுக்கு நலம் சேர்க்கும் இந்த சுண்டைக்காயின் வத்தலை தினம் மோரில் கலந்து காலையில் சாப்பிட்டால் வயிற்றுப்பிரச்சினை இருக்காது.. அதேபோல் மூல நோய் உள்ளவர்கள் சிறிதளவு சுண்டைக்காயை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், மூல கடுப்பும், ரத்தக் கசிவும் நீங்கிவிடும்.

சுண்டைக்காய் உண்பதால் மேலும் பல நன்மைகள் ஏற்படுகின்றன. அவை

எலும்புகளுக்கு வலுவூட்டும்.
ரத்தத்தை சுத்தம் செய்யும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
புளித்த ஏப்பம் விடுபட செய்யும்.
உடல் சோர்வினை நீக்கும்.
மூட்டுவலியினை குறைக்கும்.
ஜீரண சக்தியை எளிதாக்கும்.

இதுமட்டுமல்லாமல் வறட்டு இருமல், மார்பு சளி, ஆஸ்துமா, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், நாள்தோறும் சிறிதளவு சுண்டைவத்தலை நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிட நோய்கள் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

சுண்டைக்காய் எல்லா காலங்களிலும் கிடைக்காது என்பதால், கிடைக்கும் காலத்திலேயே சுண்டைக்காய்களை நசுக்கி மோரில் ஊறவைத்து வெயிலில் காயவைத்து பத்திரப்படுத்திக்கொள்ளலாம்.

வீடியோ