பல்சுவை இணைய இதழ்
    


புதிய வெளியீடு
மருத்துவம்
செவ்வாழை
செவ்வாழையின் மருத்துவ குணங்கள்
நம் உலகில் எல்லா காலங்களிலும் கிடைக்கும் ஒரே பழம் வாழைப்பழம் மட்டுமே. இந்த வாழைப்பழம் தான் உலக மக்களால் அதிகம் உண்ணப்படும் பழமாகவும் இருக்கிறது. இந்த வாழைப்பழத்தின் ஒரு வகையான செவ்வாழையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளதால் அது நம்மை பல்வேறு நோய்களிலிருந்தும் காக்கிறது.

இன்றைய உலகில், உடல் எடை குறைப்பது என்பது பெரும் போராட்டமாகவே மாறிவிட்டது. எனவே, தினந்தோறும் ஒரு செவ்வாழைப்பழத்தினை, காலையில் சாப்பிட்டால் அதிக நேரத்துக்கு பசி எடுக்காமல் இருக்கும். அதனால் வேறு உணவுகளை சாப்பிடத் தேவை இருக்காதென்பதால் உடல் எடை அதிகரிக்காது.

மலச்சிக்கல் மற்றும் மூலநோய் பாதிப்பு உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் விரைவில் அந்நோயிலிருந்து விடுபடலாம். ஏனெனில் செவ்வாழையில் 50 சதவீதம் நார்ச்சத்து உள்ளதால், அது மலமிலக்கியாக செயல்படுகிறது.

செவ்வாழையில் உள்ள பீட்டா-கரோட்டீன், இரத்தத்தமனிகள் தடிமனாவதைத் தடுத்து, இதய நோய், புற்று நோயிலிருந்து நம்மைக் காக்கின்றது. மேலும், இந்த பீட்டா கரோட்டின் வைட்டமின் ஏ வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும், சரும ஆரோக்கியத்தையும் அளிக்கின்றது.

செவ்வாழையில் இருக்கும் அதிகமான பொட்டாசியம் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கிறது. மேலும் நம் உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளுக்கு பலம் சேர்க்கிறது.

செவ்வாழையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்தத்தில் காணப்படும் ரத்த அணுக்களின் அளவை சீராகப் பராமரிக்க உதவுகின்றன. மேலும் ஹீமோகுளோபின் அளவையும் பராமரிக்க உதவி செய்கின்றன.

அடிக்கடி நெஞ்செரிச்சல் பிரச்சினை உள்ளவர்களுக்கு செவ்வாழை ஒரு அருமருந்தாகும்.. இதில் உள்ள ஆன்டாசிட் தன்மையினால் நெஞ்செரிச்சல் பிரச்சனை அறவே நீங்கும்.

முக்கியமாக நரம்புத் தளர்ச்சி மற்றும் ஆண்மைக் குறைபாடு உள்ளவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழை பழத்தினை சாப்பிட்டு வந்தால், அவர்களின் குறைபாடுகள் விரைவில் நீங்கும்.

அதேபோல் சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற தோல் வியாதிகள் மற்றும், பல்வலி, பல்லசைவு போன்ற பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும் தன்மை கொண்டது.

நாள்தோறும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும். நம் உடல் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

எனவே, தினம் ஒரு செவ்வாழைப் பழத்தினைச் சாப்பிடுங்கள். பூரண உடல் நலத்தைப் பெற்றிடுங்கள்.

வீடியோ