பல்சுவை இணைய இதழ்
    


புதிய வெளியீடு
மருத்துவம்
உருளைக்கிழங்கு உடலுக்கு நல்லதா? கெட்டதா?
உருளைக்கிழங்கு என்றவுடன் பெரும்பாலானவர்கள் நினைப்பது என்னவெனில், அது வாயுத் தொல்லையை ஏற்படுத்தும் என்பது தான். ஆனால், நாம எல்லாம் நினைத்துக் கொண்டிருப்பதற்கும் மேல் உருளைக்கிழங்கில் நிறைய சக்திகள் இருக்கிறது.

உலகிலேயே அரிசி, கோதுமை, சோளம் இந்த மூன்று பயிர்களுக்கும் அடுத்ததாக அதிக உற்பத்தி செய்யப்படுகின்ற ஒரு பயிர் உருளைக்கிழங்கு மட்டும் தான்.

உருளைக்கிழங்கு ஆங்கிலத்தில் potato என்று பெயர். இதன் தாவரவியல் பெயர் Solanum tuberosum.

உருளைக்கிழங்கின் தாயகம் என்று பார்த்தால் அது பெரு நாடு தான். அங்கிருந்துதான் ஐரோப்பியாவுக்கும், அதன்பிறகு மற்ற பகுதிகளுக்கும் வந்திருக்கிறது.

உருளைக்கிழங்கை நாம் உணவில் சேர்த்துக்கொள்வதினால் நம் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றது

ஊட்டச்சத்துக்குறைவால் ஏற்படுகின்ற சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த உருளைக்கிழங்கின் மசியலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் போதும்.

இரண்டு பச்சை உருளைக்கிழங்குகளைத் தோலொடு தண்ணீர்விட்டு அரைத்து, இரு தேக்கரண்டி வீதம், உணவு சாப்பிடுவதற்கு முன்பு சாப்பிட்டு வந்தால், வாதநோய் முற்றிலும் குணமாகும்.

முகத்தில் இருக்கும் சுருக்கம் நீங்க வேண்டும் என நினைப்பவர்கள், பச்சை உருளைக்கிழங்கை நசுக்கி முகத்தில் தேய்த்து வந்தாலே போதும். முகம் அயர்ன் செய்த துணி போல் காட்சியளிக்கும்.

தீயினால் ஏற்படுகின்ற காயங்கள், கொப்புளங்கள், பனி வெடிப்பு, பாதத்தின் குதிக்காலில் தோன்றும் வெடிப்பு, புண்கள் அனைத்திற்கும் பச்சை உருளைக்கிழங்கை அரைத்து, பத்தாகப் போட விரைவில் குணமாகும்.

கண் எரிச்சல், கண் சோர்வு ஏற்படும்போது உருளைக்கிழங்கை சிறியதாக இலைபோல் வெட்டி, இரண்டு கண்களின் மேல் வைத்து, சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டு இருந்தாலே நல்ல பலன் கிடைக்கும்.

வயிற்று எரிச்சல், வயிற்று உப்புசம் நீங்க நன்கு வேக வைத்து மசித்த ஒரு உருளைக்கிழங்கைச் சூடான பாலுடன் சேர்த்து பருகுவதால் அமிலச் சுரப்பு மட்டுப்பட்டும்.

உருளைக்கிழங்கு சாப்பிட்டால் குண்டாகிடுவோம் என்கிற தவறான எண்ணம் நிறைய பேரிடம் உள்ளது… ஆனால், அது கண்டிப்பா மூட நம்பிக்கை தான். எனவே, அதை மறந்துவிட்டு உருளைக்கிழங்கை உணவாக சேர்த்துக் கொள்வதனால் நல்ல பலன் கிடைக்கும்.

உருளைக்கிழங்கை எண்ணெயில் பொறித்து சாப்பிவது தான் உடலுக்கு கெடுதி.. மற்றபடி வேறு முறைகளில் உட்கொள்ளுதல் கெடுதி இல்லை.

வீடியோ