பல்சுவை இணைய இதழ்
    


புதிய வெளியீடு
மருத்துவம்
அவரைக்காயின் அற்புதங்கள்
அவரைக்காய் இருபுற வெடிகனி குடும்ப வகையைச் சேர்ந்தது.

அவரைக்காயில கொம்பவரை, கொழுப்பவரை, கோழிஅவரை, சிவப்பவரை, சீனிஅவரை, கொத்தவரைன்னு பல வகைகள் உள்ளன. அவரைக்காய்க்கு ஆங்கிலத்தில் Village Beans அல்லது Broadbeans என பெயர்.. இதன் தாவரவியல் பெயர் Lablab purpureus ஆகும்.

100 கிராம் அவரைக்காயில் உள்ள சத்துக்கள் பின் வருமாறு.

வைட்டமின் - A, B, C
கார்போஹைட்ரேட் - 48%
புரதச்சத்து - 1.8%
நார்ச்சத்து - 1.75%
இரும்புச்சத்து - 11.6 மி.கி

இது மட்டுமின்றி அவரைக்காயில் நார்ச்சத்தும் மிகஅதிகமாக காணப்படுகின்றது.

அவரைக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பின்வருமாறு.
அவரைக்காயில் பிஞ்சுக்காய் தான் சிறப்பானது. எளிதில் ஜீரணமாகும். சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்து இருப்பதால் பூஞ்சையான உடல்வாகு கொண்டவர்களுக்கு இதை அடிக்கடி செய்து கொடுத்தால், அவர்களது உடல் நன்கு தேறும்.

பித்தத்தினால கண்சூடு, கண்பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகள் உள்ளவர்கள் பிஞ்சு அவரைக்காயை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால், பித்தம் குறைந்து, கண் சூடு மட்டுப்படும். மங்கிய பார்வையும் தெளிவடையும்.

இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள், அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில், அவரைக்காய் இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைத்துவிடுகிறது.

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு அவரைக்காய் ஒரு சிறந்த மருந்து. அவரைக்காயில் இருக்கின்ற நார்ச்சத்து, மலமிளக்கியாக செயல்பட்டு, கஷ்டம் இல்லாமல் மலத்தை வெளியேற்ற உதவுகின்றது.

செரிமானத் தொல்லை இருப்பவர்கள், அடிக்கடி அவரைக்காயை உணவில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். மேலும், வயிறு எரிச்சல் மற்றும் வயிறு சம்மந்தமான உபாதைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

ரொம்ப நாள்பட்ட சளி, இருமலால் அவதிப்படுபவர்களுக்கு அவரைக்காயில சூப் செய்து கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சிலர் இரவில தூக்கம் வராமல் தவித்தபடி இருப்பார்கள். அதனால் அவர்களால் மறுநாள் காலையில் சரியாக வேலை பார்க்க முடியாமல் அவதிப்படுவார்கள். அவர்கள் இரவு உணவில் அவரைக்காயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அவர்களுக்கு அருமையான தூக்கம் வரும்.

மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் இப்பொழுது அதிகமாகிவிட்டார்கள். அவர்களுக்கு மிக எளிமையான மருத்துவம் நம் அவரைக்காயில் இருக்கிறது. பிஞ்சு அவரைக்காய்களை எடுத்து, சிறிது நீர் விட்டு, மிக்ஸியில அரைத்துக்கொண்டு, 1 டீஸ்பூன் மிளகுத் தூள், 1 டீஸ்பூன் சுக்குத் தூள் இரண்டையும் சேர்த்து, ஒரு மண் சட்டியில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து, பசை போல் காய்ச்ச வேண்டும். பிறகு சிறிது சூடு ஆறியதும் மூட்டுவலி இருக்கின்ற இடத்துல் தடவ வேண்டும். இதுபோல் ஒரு வாரம் செய்துவந்தால், மூட்டுவலி இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.

வீடியோ