புதிய வெளியீடு |
சமையலோ சமையல் |
மனம் மயக்கும் உப்புக்கறி |
தேவையான பொருட்கள்
ஆட்டுக்கறி – 1/2 கிலோ சின்ன வெங்காயம்- 1/4 கிலோ தக்காளி- 4 மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன் இஞ்சி – 100 கிராம் பூண்டு – 100 கிராம் காய்ந்த மிளகாய்- 50 கிராம் எண்ணெய் – 150 மி.லி. கொத்துமல்லித்தழை – 1 சிறிய கட்டு கறிவேப்பிலை – 1 கொத்து கடுகு, உளுந்து – சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப செய்முறை
முதலில் சிறிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி தழை அனைத்தையும் பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
ஆட்டுக்கறியை ஒருமுறைக்கு, இருமுறை நன்கு அலசிக் கொள்ளவும். பின் குக்கரில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து,கறிவேப்பிலையை போட்டு தாளிக்கவும். அடுத்து, பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, சேர்த்து வதக்கவும்.
பின்னர் ஆட்டுக்கறி சேர்த்து வதக்கவும்.
ஆட்டுக்கறியில் தண்ணீர் வற்றும் வரை வதக்கி, நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, இரண்டிரண்டாக கிள்ளிய காய்ந்த மிளகாய்களைச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடவும். ஆட்டுக்கறி வேகும் அளவிற்கு வேகவிடவும். ஆட்டுக்கறி நன்றாக வெந்ததும், நறுக்கி வைத்துள்ள கொத்துமல்லித்தழையைத் தூவி கிளறவும். இப்போது சுவையான உப்புக்கறி தயார். |
|
|
|
|