பல்சுவை இணைய இதழ்
    


புதிய வெளியீடு
சமையலோ சமையல்
வீட்டிலேயே தந்தூரி சிக்கன் செய்வது எப்படி?!

இதுநாள்வரை ஓட்டலில் மட்டுமே தந்தூரி சிக்கன் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் தந்தூரி சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/2 கிலோ
தந்தூரி மசாலா - சிறிதளவு
தந்தூரி கலர் பொடி - ஒரு சிட்டிகை
எலுமிச்சம்பழம் - ஒன்று
தயிர் - 175 மில்லி (ஒரு தம்ளர்)
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு மிளகு - 3 டீஸ்பூன்
தனியா - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
இஞ்சி - 1/2 இன்ச்
பூண்டு - 4

செய்முறை

கோழி இறைச்சியில் தோலுரித்து, நான்கு துண்டுகளாக்க வேண்டும்.

கூரிய கத்தியை கொண்டு ஒவ்வொரு துண்டிலும் 2, 3 இடங்களில் கீறி விடலாம்.

தனியா, சீரகம் இரண்டையும் தனியாக வறுத்து, பின் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனுடன், இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும்.

இந்த விழுதுடன் மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு ஆகியவற்றை நன்கு கலந்து, பின் அதனுடன் தந்தூரி கலர் பொடி, தந்தூரி மசாலா சேர்த்து, நன்கு கலந்து கொள்ளவும்.

அதன்பின் அதனுடன் தயிரைச் சேர்த்து மீண்டும் நன்கு கலக்கவும். இந்த கலவையை கோழி இறைச்சியில் நன்கு பூசி, இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

மறுநாள் தந்தூரி ஓவன் அல்லது கம்பி வலை அடுப்பு மீது வைத்து மிதமான தணலில் 15 முதல் 20 நிமிடங்களுக்கு வாட்டி எடுக்கவும்.

இப்போது வீட்டிலேயே செய்யப்பட்ட தந்தூரி சிக்கன் தயார்.

இந்த சூடான தந்தூரி சிக்கன்மீது, எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாப்பிட்டால் சுவை இன்னும் கூடுதலாகும்.