பல்சுவை இணைய இதழ்
    


புதிய வெளியீடு
சமையலோ சமையல்
இறால் கிரேவி

தேவையான பொருட்கள்
இறால் - 1/2 கிலோ
வெங்காயம் - 4 (பெரியது)
தக்காளி - 6 (நன்கு பழுத்தது)
பூண்டு - 2 (பெரிய முழு பூண்டு)
சோம்பு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்து - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள்- 2 ஸ்பூன்
தேங்காய் - அரை மூடி
இஞ்சி - 50 கிராம்
வர மிளகாய் - 10
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் இறாலை ஓடு, குடல் நீக்கி, நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

பின்பு சுத்தம் செய்த இறால் மீது மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பின் வெங்காயத்தையும், தக்காளியையும் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்து இஞ்சியையும், பூண்டையும் நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

அதன்பின், வரமிளகாய், சோம்பு, சீரகம் மூன்றையும் சேர்த்து, மென்மையாக வறுத்துக் கொள்ளவும்.

பின், அதனுடன் தேங்காயை சேர்த்து நன்கு மை போல்அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு, பின் நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.

ஏற்கனவே நாம், மஞ்சள் தூள் போட்டு பிசைந்து வைத்துள்ள இறாலை சேர்த்து, இளஞ்சூட்டில் வதக்கவும்.

மசித்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு விழுதையும், அரைத்து வைத்துள்ள தேங்காய், மிளகாய் சாற்றையும் வாணலியில் கொட்டி, தேவையான அளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும்.

தேவையான அளவு உப்பினை சேர்க்கவும்.

சரியான பதத்தில் இறக்கிவிடவும்.

தற்போது சுவை மிகுந்த இறால் கிரேவி தயார்.

குறிப்பு
இந்த இறால் கிரேவியை தேங்காய் இல்லாமல் செய்தாலும் சுவையாக இருக்கும்