புதிய வெளியீடு |
சமையலோ சமையல் |
நண்டு வறுவல் |
தேவையான பொருட்கள் பெரிய வெங்காயம் - 4 தக்காளி - 4 மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 100 மி.லி. அரைக்கத் தேவையான பொருட்கள்
இஞ்சி - விரல் அளவுசின்ன வெங்காயம் - 250கிராம் காய்ந்த மிளகாய் - 50 கிராம் சீரகம் - 2 டீஸ்பூன் தனியா - 4 டீஸ்பூன் செய்முறை
1. முதலில் நண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
2. அடுத்து அரைக்கத் தேவையான பொருட்களை நன்கு மை போல் அரைத்துக் கொள்ள வேண்டும். 3. அதன்பிறகு, வாணிலியில் தேவையான எண்ணெய் ஊற்றி, கடுகு பொரிந்ததும், நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு, பொன்நிறமாக வதக்கவும். 4. அதன்பிறகு அதனுடன், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். 5. அடுத்ததாக, அரைத்து வைத்த மசாலாவைச் சேர்த்து, வதக்கி, 2 டம்ளர் அளவிற்கு நீர் ஊற்றி, தேவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
6. இக்கலவை நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன், சுத்தம் செய்து வைத்துள்ள நண்டுகளைப் போடவும்.
7. அடுப்பை மெலிதாக வைக்கவும். 8. சிறிது நேரம் கழித்து, நண்டுகள் உடைந்திடா வண்ணம், மெதுவாக திருப்பி விடவும். 9. இன்னும் சிறிது நேரம் கழித்து, நண்டு வெந்திருப்பதையும், மசாலா கலவை கெட்டியானதையும், உறுதிப்படுத்திக் கொண்டு, இறக்கி வைத்து பரிமாறவும். |
|
|
|
|