புதிய வெளியீடு |
சமையலோ சமையல் |
மண்சட்டி மீன் குழம்பு |
தேவையான பொருட்கள் கடுகு - 1/2 ஸ்பூன் உளுந்து - 1/2 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் வெங்காயம் - 2 (பெரியது) தக்காளி - 4 கறிவேப்பிலை - ஒரு கொத்து புளி - (சிறிதளவு) நல்லெண்ணெய் - 50 மி.லி தேங்காய் - 1/4 மூடி வரமிளகாய் - 10 கொத்தமல்லி தூள் - 2 கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை
முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
அதன்பின் புளியை நீரில் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தையும், தக்காளியையும் பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுத்ததாக, மண்சட்டியில் மிளகாய், கொத்தமல்லி, சீரகம் மூன்றையும் மென்மையாக வறுத்துக் கொள்ளவும். பின் சூடு ஆறியதும், அரைத்துக் கொள்ளவும். பின், அதனுடன் தேங்காயையும், பாதி வெங்காயத்தையும் சேர்த்து தண்ணீர்விட்டு மை போல் அரைத்துக் கொள்ளவும். பின் அரைத்த விழுதை புளிச்சாற்றுடன் கலந்து கொள்ளவும்.
பின் அடுப்பில் மண்சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகுஉளுந்து, கறிவேப்பிலை சேர்த்து,பின் மீதி இருக்கும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும், புளிக்கரைசலை ஊற்றி, தேவையான தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும், அதில் மீன் துண்டுகளை சேர்த்து கிளறி, 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து இறக்கவும். தற்போது சுவையான மண்சட்டி மீன் குழம்பு ரெடி. |
|
|
|
|