பல்சுவை இணைய இதழ்
    


புதிய வெளியீடு
சமையலோ சமையல்
ஆட்டு எலும்பு சூப்

தேவையான பொருட்கள்
ஆட்டு எலும்பு 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 1/4 கிலோ
தக்காளி - 1/4 கிலோ
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - விரல் அளவு
பூண்டு - 10 பல்
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - 1/2 கட்டு
நெய் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 100 மி.லி.

செய்முறை

1. முதலில், ஆட்டு எலும்பை கழுவி நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

2. வெங்காயத்தையும், பாதி அளவு தக்காளியையும் மிகவும் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மீதமுள்ள தக்காளியை விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

3. பின் பூண்டு, இஞ்சியை மிக்ஸியில் நன்கு விழுது போல் அரைத்துக் கொள்ளவும்.

4. ஒரு பாத்திரத்தில் எண்ணெய்யை ஊற்றி, சூடானதும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். அது பொன்நிறமானதும், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து நன்கு கிளரவும்.

5. அதன்பிறகு, எலும்பையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

6. அடுத்து, மிளகுத்தூள், சீரகத் தூள், தனியா தூள் சேர்த்து, நன்கு வதக்க்கவும். பின் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு, தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.

7. எலும்பு வெந்தவுடன், அரைத்து வைத்துள்ளத தக்காளி சேர்த்து, மீண்டும் கொதிக்க வைக்கவும்.

8. உப்பை சரிபார்த்து இறக்கி, பின் அதில் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லித்தழைகளை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு
சூப்பிற்காக ஆட்டு எலும்பு வாங்கும் பொழுது, மார்கண்டமாக வாங்கினால், சூப் இன்னும் சுவை கூடும்.